Thursday, September 10, 2009

இனம் தின்னும் ராஜபக்சே

சொந்த நாய்களுக்குச்சொத்தெழுதி வக்கும் தேசங்களே!
ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதேநிலம் மீட்டுத்தாருங்கள்பூனையொன்று காய்ச்சல் கண்டால்மெர்சிடீஸ் கார் ஏற்றிமருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்மரணத்தை தொட்டுமனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும்வாளை மீனைப்போல்உமிழ்நீர் வற்றிய வாயில்ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடுரொட்டி ரொட்டியென்றுகைநீட்டிம் சிறூவர்க்குக்கை கொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்சிங்கள வெறிக் கூத்துக்களைநிரந்தரமாய் நிறுத்துங்கள்!வாய்வழி புகட்டிய தாய்ப்பால்காதுவழி ரத்தமாய் வடிவது கண்டுகண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கிவைத்த உடல்களில்எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடிஅடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்குஅழுதுதொலைக்கும் பிள்ளைகளின்அவலக்குரல் போக்குங்கள்!
எனக்குள்ள கவலையெல்லாம்இனம் தின்னும்ராஜபக்சே மீதல்லஈழப்போர் முடிவதற்குள்தலைவர்கள் ஆகத்துடிக்கும்தலையில்லாப் பேர்வழிகள் மீதல்லஎம்மைக்குறையாண்மை செய்துவைத்தஇறையாண்மை மீதுதான்குரங்குகள் கூடிக்கட்டமுடிந்த பாலத்தைமனிதர்கள் கூடிக்கட்டமுடியாதா?

போரின் முடிவென்பதுஇனத்தின் முடிவல்லஎந்த இரவுக்குள்ளும்பகல் புதைக்கப்படுவதில்லைஎந்த தோல்விக்குள்ளும்இனம் புதைக்கப்படுவதில்லைஅழிந்தது போலிருக்கு அருகம்புல்ஆனால்கண்ணுக்குத் தெரியாத வேர்கள்அங்கேசிந்திய துளிகள்சிவப்பு விதைகள்ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்பீரங்கி ஓசையில்தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்ஈழப்பனைமரத்தில்என்றேனும் கூடுகட்டும்


நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

(மின்னஞ்சலில் பெற்றேன்)

பாரதி வரிகள்

for all poems go here
http://www.puducherry.com/bharathiar/

selected bharathi poems...
பிடித்த சில பாரதி வரிகள்..

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ்சிறு கதைகள் பேசி
 மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழபருவமெய்தி கொடுங்கூற்றுக் கிரையென பின்மாயும்
 பலவேடிக்கை மனிதரைப் போல் -நான் வீழ்வெ னென்று நினைத்தாயோ ???

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் !வல்லமை தாராயோ, - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கேசொல்லடி சிவசக்தி! - நிலசுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன் நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடுநல் அகங்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

மனதி லுறுதி வேண்டும்,வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.


செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள்தந்தையார் நாடென்ற பேச்சினிலே
ஒருசக்தி பிறக்குது முச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ் நாடு  உயர்வீரம் செறிந்த தமிழ் நாடு
நல்லகாதல் புரியும் அரம்பையர் போலிளங்கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடுகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்லபல்வித மாயின சாத்திரத்தின் மணம்பாரெங்கும் வீசுந் தமிழ் நாடுவள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி யாரம் படைத்த தமிழ் நாடு

காணி நிலம் வேண்டும்,  பராசக்திகாணி நிலம் வேண்டும்;
அங்குதூணி லழகியதாய்  நன்மாடங்கள்துய்ய நிறத்தினவாய் - அந்தக்காணி நிலத்திடையே - ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும்;
அங்கு கேணி யருகினிலே - தென்னைமரம்கீற்று மிள நீரும்.பத்துப் பனிரண்டு - தென்னைமரம்பக்கத்திலே வேணும்;
 நல்லமுத்துச்சுடர் போலே நிலாவொளிமுன்பு வரவேணும்;
 அங்குக்கத்துங் குயிலோசை - சற்றேவந்து காதிற் படவேணும்;
 என்றன்சித்த மகிழ்ந்திடவே - நன்றாயிளந்தென்றல் வரவேணும்


நின்னைச் சரண்டைந்தேன் --- கண்ணம்மாபொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரண்டைந்தேன் --- கண்ணம்மா நின்னைச் சரண்டைந்தேன்


சாத்திரம்பேசுகிறாய்,- கண்ணம்மா! சாத்திர மேதுக்கடீ ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா! சாத்திர முண்டோடீ? மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்புசெய்வோம்;காத்திருப் பேனோடீ?- இது பார்,கன்னத்து முத்தமொன்று!


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து
தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!


** பாரதி வரிகள் **